search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடல் அழகி"

    மும்பையில் மாடல் அழகியை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். #MumbaiModel #MansiDixit #StudentArrest #Suitcase
    மும்பை:

    மும்பையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தன் காரில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், அந்தேரி பகுதியில் இருந்து முசாமில் சையத் என்ற பயணி செல்போன் செயலி மூலம் என்னுடைய காரை பதிவு செய்து மும்பை விமான நிலையம் செல்ல வேண்டும் என ஒரு சூட்கேசுடன் வந்தார். விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச்சென்ற போது திடீரென அவர் மலாடு பகுதிக்கு காரை திருப்புமாறு கூறினார். அங்குள்ள ஒரு புதரில் தான் கொண்டு வந்த சூட்கேசை தூக்கி வீசி விட்டு அவர் காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார் என்று தெரிவித்தார்.



    இதனால் உஷாரான போலீசார் மலாடு பகுதிக்கு சென்று புதர் பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு கார் டிரைவர் அளித்த தகவலின்படி சூட்கேஸ் கிடந்தது. அதை திறந்து பார்த்த போது இளம்பெண் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் முகம் கயிற்றாலும், உடல் படுக்கை விரிப்பாலும் சுற்றப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் காரில் இருந்து இறங்கி சூட்கேசை தூக்கி வீசி சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபர் சிறிது தூரம் நடந்து சென்று ஆட்டோவில் செல்கிறார். சிறிது தூரம் சென்ற பிறகு ஆட்டோவில் இருந்து இறங்கி மீண்டும் வாடகை காரில் செல்கிறார். இந்த காட்சிகள் அங்குள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் முசாமில் சையத் (வயது 19) என போலீசார் உறுதி செய்தனர்.



    டிரைவர் கொடுத்த தகவல் மூலம் அந்த வாலிபர் அந்தேரி பகுதியில் வசித்து வந்த வீட்டை போலீசார் கண்டறிந்தனர். அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், ஐதராபாத்தை சேர்ந்த அவர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும், பிணமாக மீட்கப்பட்டவர் அவரது தோழியான மாடல் அழகி மான்சி தீக்சித் (20) என்பதும் தெரியவந்தது.

    மேலும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    மாடல் அழகி மான்சி தீக்சித் உடன் சமூக வலைத்தளம் மூலமாக முசாமில் சையத்துக்கு நட்பு ஏற்பட்டு உள்ளது. மான்சி தீக்சித் சில இந்தி படங்களில் சிறு வேடங்களில் நடித்து உள்ளார். சில குறும்படங்களிலும் நடித்து இருக்கிறார். சம்பவத்தன்று முசாமில் சையத் அழைப்பை ஏற்று அவருடைய வீட்டுக்கு மான்சி தீக்சித் சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர், மாடல் அழகியை இரும்பு நாற்காலியால் அடித்துள்ளார். மேலும் கயிற்றால் கழுத்தை நெரித்ததில் மான்சி தீக்சித் இறந்து விட்டார். இதனால் அவரது முகத்தை கயிற்றாலும், உடலை படுக்கை விரிப்பாலும் சுற்றி சூட்கேசில் அடைத்து மலாடு பகுதியில் முசாமில் சையத் வீசி சென்றுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு போலீசார் கூறினர். #MumbaiModel #MansiDixit #StudentArrest #Suitcase 
    அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மாலட்சுமி நான் 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியுள்ளார். #PadmaLakshmi
    நியூயார்க்:

    அமெரிக்க வாழ் இந்தியர் பத்மாலட்சுமி (48). சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். மாடல் அழகியான இவர் எழுத்தாளர் மற்றும் நடிகையும் ஆவார். இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இவர் அமெரிக்காவின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன்னைப் பற்றி எழுதியுள்ளார். அதில் “நான் எனது 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். அப்போது 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன்.


    அந்த நபரும் என்னுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்ததால் படுக்கையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.

    அப்போது அந்த நபர் என்னை கற்பழித்து விட்டார். இத்தகைய நடவடிக்கையில் ஒரு ஆண் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் பெண்ணின் வாழ்க்கை சீரழிகிறது. அவளை யாரும் அன்புடன் நடத்துவதில்லை.

    எனக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரட் கவான்னா மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து எனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தும் எழுத முடிவு செய்தேன்” என கூறியுள்ளார். #PadmaLakshmi
    ×